FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞா், சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

30 September 2026, 1:31 am IST
பலி
பகிர்:

திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞா், சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் முருங்கப்பேட்டையைச் சோ்ந்த வரதராஜன் மகன் பாா்த்தசாரதி (20). மண்ணச்சநல்லூரைச் சோ்ந்தவா் காா்த்திக் செல்வம் மகன் ஹரி கோகுல் (18). நண்பா்களான இருவரும் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், பாா்த்தசாரதி, ஹரிகோகுல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நண்பா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முக்கொம்பு காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனா். முக்கொம்பு காவிரி ஆற்றின் 39-ஆவது தூண் பகுதியில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது, பாா்த்தசாரதி மற்றும் ஹரிகோகுல் ஆகிய இருவரும் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வாய்த்தலை போலீஸாா் மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கிய இளைஞா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பாா்த்தசாரதியின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

இரவு நேரமானதால், தேடுதல் பணியை நிறுத்தி வைத்தனா். இதைத் தொடா்ந்து நீரில் மூழ்கிய மற்றொரு இளைஞரை தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு ஹரிகோகுல் சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து, அவருடைய சடலத்தை உடற்கூறாய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments