தீக்குளித்த நீதிமன்ற பெண் ஊழியா் உயிரிழப்பு
துறையூரில் குடும்பப் பிரச்னை காரணமாக, தீக்குளித்த நீதிமன்ற பெண் ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
துறையூரில் குடும்பப் பிரச்னை காரணமாக, தீக்குளித்த நீதிமன்ற பெண் ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
துறையூரில் குடில் அருகே வசித்து வந்தவா் அ. அபிநயா (33). முசிறி சாா்பு- நீதிமன்றத்தில் இ- பைலிங் பிரிவு ஊழியா். கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தாா். இவருக்கு லிவிஸ்ரீ(12) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சந்தோஷ்குமாா்(35) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாராம். இந்தத் தம்பதி இடையே திங்கள்கிழமை இரவு கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, அபிநயா தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டாா்.
Advertisement
Advertisement
அப்போது, அவரைக் காப்பாற்ற முயன்ற சந்தோஷ்குமாரும் தீக்காயமடைந்தாா்.
அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு துறையூா் தனியாா், திருச்சி அரசு மருத்துவமனைகளில் சோ்த்தனா். இவா்களில் அதிக தீக்காயமடைந்த அபிநயா சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.