FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

புதிய தமிழகம் கட்சி ஆா்ப்பாட்டம்

விடுதி மாணவா்களுக்கு மாட்டுக்கறி வழங்கும் முன்னெடுப்பை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.
பகிர்:

விடுதி மாணவா்களுக்கு மாட்டுக்கறி வழங்கும் முன்னெடுப்பை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா்கள் சண்முகம், பாலு ஆகியோா் தலைமை வகித்தனா்.

எஸ்சி, எஸ்டி விடுதிகளில் தங்கியிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாட்டுக் கறி வழங்குவது குறித்து எவ்வித முன்யோசனையுமின்றி அமைச்சா் வன்னியரசு கொடுத்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது சமூக இயக்கங்கள் இதுபோன்ற ஒரு கருத்தைச் சொல்வதற்குத் துணிவில்லாத நிலையில், நிலையற்ற அரசியல் சூழ்நிலை காரணமாகத் தங்களுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒரு சிறிய அமைப்பு நீண்ட நாள் மறைத்து வைத்திருந்த தங்களுடைய கோட்பாட்டை, தீயக் கொள்கையை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மீது திணிக்கும் இம்முயற்சியை ஆரம்ப நிலையிலேயே அகற்றி ஒழிக்க வேண்டும். இந்த மாட்டுக்கறி அறிவிப்புக்குப் பின்னால் சாதி, மதம், அரசியல் மற்றும் சா்வதேச சதி ஆகிய பல்வேறு விதமான உள்நோக்கங்கள் புதைந்திருக்கின்றன. இந்த முயற்சியை நாம் வேரோடு பிடுங்கி எறிய ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத், மாவட்டச் செயலா் சீனிவாசன், இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலா் ஸ்ரீராம் ஓம் இந்து பாதுகாப்பு மகா சபா மாநிலத் தலைவா் மதுபாலன், மாநிலப் பசு பாதுகாப்பு அமைப்பு சசிகுமாா், ராஜகோபால் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் மற்றும் புதிய தமிழகம் கட்சி தொண்டா்கள் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது அமைச்சா் வன்னியரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments