32 ஆண்டுகளுக்கு பிறகு புதிய பாடத்திட்டத்தில் தேர்வு
வேலூர், அக். 8: தொழிற்கல்வி மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி மார்ச் 2012ல் அரசு பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள
வேலூர், அக். 8: தொழிற்கல்வி மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி மார்ச் 2012ல் அரசு பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொதுச் செயலர் செ.நா. ஜனார்த்தனன் வெளியிட்ட அறிக்கை:
66 பாடப்பிரிவுகளாக இருந்த பாடங்கள் இப்போது 12 பாடப்பிரிவுகளாக மாற்றியமைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதில், 9 பாடப்பிரிவுகள் புதிய பாடத்திட்டத்தின்படியும், 3 பாடப்பிரிவுகள் பழைய பாடத்திட்டத்தின்படியும் தொடருகிறது.
புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டப்படி 9 பாடப்பிரிவுகளுக்கு புதிய வினாத்தாள் முறை நடைமுறைப்படுத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், பழைய பாடத்திட்டங்களில் 3 பாடங்களுக்கு வினாத்தாள் முறை மாற்றப்படாமல் பழைய முறையிலேயே தொடர வேண்டும்.
32 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாமல் உள்ள மூன்று பாடத்திட்டங்களை இக்கல்வியாண்டிலேயே தற்கால தேவைக்கேற்ப மாற்றியமைத்து புதிய பாடத்திட்டங்களை வகுத்து புத்தகங்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.