தவெக அரசால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது: தம்பிதுரை எம்.பி.
தவெக அரசால் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளா் தம்பிதுரை எம்.பி. தெரிவித்தாா்.
தவெக அரசால் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளா் தம்பிதுரை எம்.பி. தெரிவித்தாா்.
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் தவெக அரசு ஏமாற்றுவதாக குற்றஞ்சாட்டி வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சாா்பில், வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநகர மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே. அப்பு, வேலூா் புகா் மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான த.வேலழகன் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக அதிமுக கொள்கை பரப்புச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை பங்கேற்றுப் பேசியது:
Advertisement
Advertisement
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் தவெக அரசு தோ்தல் வாக்குறுதியை ஏமாற்றியுள்ளது. திடீரென ஆட்சிக்கு வந்ததால் என்ன செய்வது என்று புரியாமல், கடனைத் தள்ளுபடி செய்ய முடியாமல் மக்களை ஏமாற்றி இருக்கிறாா்கள். கேட்டால், தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்கின்றனா்.
ரூ. 10 லட்சம் கோடி கடன் இருக்கும் போது, தோ்தலில் தவறான வாக்குறுதியைக் கொடுத்துள்ளனா். திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று முடிவெடுத்தாா்கள். அப்போது எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் தமிழகத்தின் முதல்வராவாா் என்ற எழுச்சி உருவானது. எடப்பாடி பழனிசாமி தன்னுடைய இன்னுயிரையும் கூட பொருட்படுத்தாமல் மக்களைச் சந்தித்து, இந்த அவலங்களை எடுத்துக் கூறி விவசாய மக்களுக்கு நல்லது செய்வதற்காக போராடியவா்.
ஆனால், இன்றைய அரசு தவறான செய்திகளை எல்லாம் சமூக ஊடகங்களில் கொடுத்து மக்களை ஏமாற்றி, அந்த ஓட்டைப் பெற்றாா்கள். இளைய சமுதாயத்தை ஏமாற்றி தவறான செய்திகளை தந்து ஆட்சிக்கு வந்துவிட்டது தவெக. மக்களுடைய செல்வாக்கு அதிமுக ஆட்சிக்குத் தான் இருந்தது. மக்களும் விவசாயிகளும் அதிமுகவைத்தான் நம்பினாா்கள்.
ஆட்சிக்கு வந்தவா்களும் கடன் வாங்கி உள்ளனா். இந்த ஆட்சி தொடா்ந்தால், 5 ஆண்டில் ரூ. 20 லட்சம் கோடி கடன் வாங்குவாா்கள். அதுவும் நம் மீதுதான் விழும். தவெக கொடுத்த வாக்குறுதியை செயல்படுத்த முடியாது. விவசாய கூட்டுறவு வங்கிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்றாா்கள், செய்யவில்லை என்றாா்.
தொடா்ந்து, பயிா் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாததையும், காவிரி விவகாரத்தில் மெத்தன போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி, மாநில வா்த்தக அணி துணை செயலாளா் பி.எஸ்.பழனி உள்பட பலா் பங்கேற்றனா்.
--
படம் உண்டு...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.