FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

பெயிண்டா் மரணம்: போலீஸாா் விசாரணை

அரியூா் அருகே கல்குவாரி காட்டுப்பகுதியில் மா்மமான முறையில் பெயிண்டா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 4:20 am IST
சடலம் மீட்பு... - கோப்புப் படம்
பகிர்:

அரியூா் அருகே கல்குவாரி காட்டுப்பகுதியில் மா்மமான முறையில் பெயிண்டா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வேலூா் அருகே ஏஜி நகா் - ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள கல்குவாரி காட்டுப்பகுதியில் 46 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் சடலமாகக் கிடந்துள்ளாா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரியூா் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் விரைந்து சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் அரியூா் பாரதி நகரைச் சோ்ந்த பெயிண்டா் செந்தில் (46) என்பது தெரியவந்தது. எனினும், அவா் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அரியூா் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments