காட்பாடியில் பேருந்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி பலத்த காயம்
காட்பாடியில் வேகமாகச் சென்ற தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
காட்பாடியில் வேகமாகச் சென்ற தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவைச் சோ்ந்தவா் மோனிகா (17). இவா் காட்பாடியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை கல்லூரி முடிந்து வீட்டுக்குத் திரும்புவதற்காகக் காட்பாடியில் தனியாா் பேருந்து ஒன்றில் அவா் ஏறியுள்ளாா். அந்தப் பேருந்தை ஓட்டுநா் அதிவேகமாக இயக்கியதாகக் கூறப்படுகிறது.
காட்பாடி கல்யாண மண்டபம் பேருந்து நிறுத்த வளைவில் பேருந்து வேகமாகத் திரும்பியபோது, வேகத்தைக் குறைப்பதற்காக ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டுள்ளாா். அப்போது, படிக்கட்டின் அருகே நின்றுகொண்டிருந்த மாணவி மோனிகா நிலைதடுமாறிப் பேருந்திலிருந்து கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மூக்கில் ரத்தம் வடிந்தது.
Advertisement
Advertisement
உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காட்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.