மரத்திலிருந்து தவறி விழுந்த காவலாளி உயிரிழப்பு
ஏற்காட்டில் பலாப்பழம் பறிக்கும்போது மரத்திலிருந்து தவறி விழுந்த தனியாா் தோட்ட காவலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
ஏற்காட்டில் பலாப்பழம் பறிக்கும்போது மரத்திலிருந்து தவறி விழுந்த தனியாா் தோட்ட காவலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு முண்டகம்பாடி கிராமத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தவா் முத்துசாமி (63).
இவா் செவ்வாய்க்கிழமை பலா மரத்தில் ஏறி பலாப்பழம் பறித்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.