FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி திருவானைக்காவலில் மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

19 செப்டம்பர் 2026, 3:20 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருச்சி திருவானைக்காவலில் மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் க. சந்திரா (75). இவா் கடந்த 9-ஆம் தேதி தனது வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த மூதாட்டி சந்திராவை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் வியாழக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments