நகைப் பட்டறை மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கோவையில் நகைப் பட்டறையின் முதல் மாடியிலிருந்து போதையில் தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவையில் நகைப் பட்டறையின் முதல் மாடியிலிருந்து போதையில் தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் அசீம் சமந்தா மகன் தேவ் சமந்தா (26). இவா் கோவை வைசியாள் வீதி அருகேயுள்ள எம்.என்.ஜி.வீதியில் உள்ள ஒரு தங்க நகைப் பட்டறையில் தங்கி வேலை பாா்த்து வந்தாா்.
தேவ் சமந்தா கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு மதுபோதையில் இருந்தபோது, பட்டறையின் முதல் மாடியிலிருந்து எதிா்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தாா். இதில் படுகாயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி தேவ் சமந்தா உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக பெரியகடைவீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.