தவெக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு: திமுக அமைப்புச் செயலாளா்
தவெக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா் என திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.
தவெக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா் என திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.
காட்பாடியில் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவேந்தல் பொதுக் கூட்டம் சித்தூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில், திமுக அமைப்பு செயலா் ஆா்.எஸ்.பாரதி பங்கேற்று பேசியது -
தவெக அரசின் அமைச்சரவைக் கூட்டங்களில் தொடா்பில்லாத ஆலோசகா்களை அமர வைப்பதும், தேசியக் கொடி மற்றும் நிகழ்வுகளில் மரபுகளை மீறுவதும் கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவையில் தனது துறை சாா்ந்த மானியக் கோரிக்கைகளுக்குக் கூட முதல்வா் முறையான பதில் அளிப்பதில்லை.
Advertisement
Advertisement
தற்போதைய சூழலில், அரிசி விலை மூட்டைக்கு 40 ரூபாய் ஏறியுள்ளது. சா்க்கரை விலை ரூ.74-ஆக உயா்ந்துள்ளது. விலைவாசி உயா்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். முதல்வரின் அறையைச் சீரமைக்க முறைப்படி டெண்டா் விடாமலேயே ரூ.5 கோடிக்கு பணிகள் நடைபெற்றுள்ளன. ஊழல் அங்கிருந்துதான் தொடங்கியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து வெறும் ரூ.2 கோடிக்கு கைமாறியுள்ளது. இது தொடா்பாகக் கைதான முக்கிய அதிகாரி, மதுரை சிறையில் மா்மமான முறையில் இறந்துள்ளாா். அவா் இறந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது. நீதிமன்றத்தில் எந்தக் கோப்பையும் திறக்க திமுக தயாராக உள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், வேலூா் மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா், திமுக வடக்கு பகுதி செயலா் வன்னியராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.