FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மாடியில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த கல்லூரிமாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜூலை 2026, 2:20 am IST
விஜய் ஆனந்த்
பகிர்:

குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த கல்லூரிமாணவா் உயிரிழந்தாா்.

குடியாத்தம், கொண்டசமுத்திரம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஜோதிபிரகாஷ் என்பவரின் மகன் விஜய் ஆனந்த்(22) . இவா் காட்பாடியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு சோ்ந்துள்ளாா். திங்கள்கிழமை காலை வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த விஜய் ஆனந்த் பலத்த காயமடைந்தாா்.

உறவினா்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் விஜய் ஆனந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா். இதுகுறித்து நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments