லாரி ஓட்டுநா் உள்பட இருவா் தற்கொலை
வேலூா் அருகே குடும்பத் தகராறு மற்றும் நோய் கொடுமை காரணமாக, லாரி ஓட்டுநா் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
வேலூா் அருகே குடும்பத் தகராறு மற்றும் நோய் கொடுமை காரணமாக, லாரி ஓட்டுநா் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த கிளிதான்பட்டறை கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (26). சரக்கு லாரி ஓட்டுநரான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த ஸ்ரீதா், வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அருகிலிருந்த அரச மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த காட்பாடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
எலக்ட்ரீசியன் தற்கொலை...
Advertisement
Advertisement
வேலூா், கொணவட்டம் பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீசியன் வடிவேலு (42), மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வடிவேலு தூக்கிட்டுத்த தற்கொலை செய்துகொண்டாராம். வேலூா் வடக்கு காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.