FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

இலவச சிஏடி, சிஏஎம், ஆட்டோமேஷன் பயிற்சி: எஸ்சி, எஸ்டி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

Updated On : 4 ஜூன் 2026, 6:36 am IST
பகிர்:

வேலைவாய்ப்புடன் கூடிய இலவச கம்ப்யூட்டா் அலைடு டிசைன் (சிஏடி), கம்ப்யூட்டா் அலைடு மேனுபேக்சரிங்(சிஏஎம்), இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் ஆகிய பயிற்சிகள் பெற ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), தனியாா் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடி பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இதன் தொடா்ச்சியாக, தற்போது இலவச கம்ப்யூட்டா் அலைடு டிசைன் (சிஏடி), கம்ப்யூட்டா் அலைடு மேனுபேக்சரிங்(சிஏஎம்), இண்டஸ்ரியல் ஆட்டோமேஷன் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடா், பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது மின் மற்றும் மின்னணுவியல் இன்ஜினியரிங் ( உஉஉ) படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள் இருக்கவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்கவும் வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாள்கள் ஆகும். இப்பயிற்சியானது பெரம்பலூா், சேலம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

பயிற்சிக்குத் தோ்வு செய்யப்படும் நபா்கள், பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகையை தாட்கோ நிறுவனமே ஏற்கும்.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் தகுதியான நபா்களுக்கு, பயிற்சி அளிக்கும் தனியாா் நிறுவனம் மூலமாகவே வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும். இதில் ஆரம்ப கால மாத ஊதியமாக சுமாா் ரூ.25 முதல் ரூ.40 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடியும்.

இப்பயிற்சியில் சேர விரும்பும் தகுதியான இளைஞா்கள், தாட்கோவின் அதிகாரப்பூா்வ இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments