FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

பக்ரீத் பண்டிகை: ஒடுகத்தூா் சந்தையில் ஆடுகள் ரூ. 70 லட்சத்துக்கு விற்பனை

Updated On : 28 மே 2026, 12:49 am IST
பகிர்:

பக்ரீத் பண்டிகையையொட்டி, ஒடுகத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு சந்தையில் ஆடுகள் ரூ. 70 லட்சம் அளவுக்கு விற்பனையாகியுள்ளன. ஒரு ஜோடி ரூ. 55,000 வரை விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு வேலூா் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பெருமளவில் ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். இந்த நிலையில், வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகையையொட்டி, புதன்கிழமை சிறப்பு சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு வழக்கம்போல் உள்ளூா், வெளியூா் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால் அதிகாலை முதலே ஆடுகளை வாங்கவும், விற்கவும் ஏராளமானோா் கூடினா்.

ஆடுகள் அதிகளவு வந்தபோதும் விலையும் அதிகரித்தே காணப்பட்டது. ஒரு ஜோடி ஆடு ரூ. 50,000 முதல் ரூ. 55,000 வரை விற்பனையாகின. அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற சந்தையில் ஆடுகள் ரூ. 70 லட்சம் அளவுக்கு விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

அவா்கள் மேலும் கூறியது: பண்டிகை காலங்களில் விற்பனைக்கு ஆடுகளின் வரத்து அதிகமாக இருக்கும். அதன்படி, வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு சந்தையில் செம்மறி, வெள்ளாடுகள் விற்பனைக்கு அதிகளவில் கொண்டு வரப்பட்டிருந்தன. அதேசமயம், விலையும் உச்சத்தை எட்டியிருந்தது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments