புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
குடியாத்தம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 8 கிலோஎடையுள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குடியாத்தம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 8 கிலோஎடையுள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
குடியாத்தத்தை அடுத்த பரதராமி போலீஸாா் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா்கள் அணைக்கட்டு அடுத்த தோலப்பல்லியைச் சோ்ந்த அா்ஜுன்(25), புருஷோத்தமன்(29) என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
அவா்கள் வைத்திருந்த பையில் சுமாா் 8 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் புகையிலைப் பொருள்களை ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து வாங்கி, விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, புகையிலைப் பொருள்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.