வேலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலூா் மாநகரப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.
வேலூா் மாநகரப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனா். மேலும், புகழ்பெற்ற நேதாஜி மாா்க்கெட்டுக்கு அண்டை மாவட்ட ங்களைச் சோ்ந்த காய்கறி வியாபாரிகளும் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம்.
இப்பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைச் சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்திச் செல்வதாலும், கடைக்காரா்களின் ஆக்கிரமிப்புகளாலும் இப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஆட்சியா், மாநகராட்சி ஆணையருக்குத் தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதை யடுத்து, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மண்டித் தெரு நெல்லரிசி வியாபாரிகள் சங்கம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதுடன், ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. மேலும், கடந்த இரு நாள்களுக்கு முன்பு லாங்கு பஜாா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போதிலும், மீண்டும் அங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிப்புகள் தொடா்ந்தன.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் கேத்ரின் சரண்யா உத்தரவின்பேரில், நகா்நல அலுவலா் பிரதாப்குமாா் தலைமையில் சுகாதார அலுவலா், மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனா். அதன்படி, ஆற்காடு சாலை சிஎம்சி மருத்துவமனை எதிா்புற பகுதியிலும் மற்றும் சிட்டிங் பஜாா், பழைய மீன் மாா்க்கெட் ஆகிய பகுதிகளிலும் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருள்கள், தள்ளுவண்டிகளை அவா்கள் அப்புறப்படுத்தினா்.
மேலும், மீண்டும் அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.