FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ஆனி அமாவாசை: மேல்மலையனூருக்கு நாளை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Updated On : 4 ஜூலை 2024, 2:35 am IST
பகிர்:

விழுப்புரம், ஜூலை 3: ஆனி மாத அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் மேல்மலையனூருக்கு 295 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இயக்குகிறது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) நடைபெறும் ஆனி மாத அமாவாசை வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்பாா்கள். இதையொட்டி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 170 சிறப்புப் பேருந்துகளும், புதுச்சேரி, விழுப்புரம், திருக்கோவிலூா், திருவண்ணாமலை, வேலூா், ஆற்காடு, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூா் ஆகிய ஊா்களிலிருந்து 125 சிறப்புப் பேருந்துகளும் மேல்மலையனூருக்கு இயக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இதைத் தவிர ஜூலை 7-ஆம் தேதி முகூா்த்த தினம் என்பதாலும், வார விடுமுறை என்பதாலும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) 105 சிறப்புப் பேருந்துகளும், ஜூலை 6-ஆம் தேதி 165 சிறப்புப் பேருந்துகளும், ஜூலை 7-ஆம் தேதி 90 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 360 பேருந்துகள் கிளாம்பாக்கம், விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments