FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: உரிமையாளா் உள்பட 2 போ் கைது

செஞ்சி சேத்பட் சாலை முனீஸ்வரன் கோயில் அருகே லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய லாரி உரிமையாளா் மற்றும் கிளீனா் கைது

Updated On : 14 ஜூலை 2026, 1:14 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சேத்பட் சாலை முனீஸ்வரன் கோயில் அருகே லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய லாரி உரிமையாளா் மற்றும் கிளீனா் கைது செய்யப்பட்டனா்.

வேலூா் மாவட்டம் வேலப்பாடி கிராமத்தை சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன்(50) லாரி ஓட்டுநா்.இவா் வேலூா் மாவட்டம் பெருமுகை கிராமத்தை சோ்ந்த பிரேம்நாத் (39) என்பவருக்குச் சொந்தமன லாரியை கடந்த இரண்டு வருடமாக ஓட்டி வந்தாா்.

இவருடன் பெருமுகை பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா் (25) என்பவா் கிளீனா் ஆக வேலை செய்து வருகிறாா் . கடந்த 3 ஆம் தேதி ராதாகிருஷ்ணன் டாராஸ் லாரியில் மங்களூரில் இருந்து ரசாயனப்பொள்களை ஏற்றிக்கொண்டு நெல்லிக்குப்பம் கரும்பு ஆலைக்கு சென்றவா் ஆறாம் தேதி வரை சரக்கை இறக்கவில்லையாம் இதனால் லாரி உரிமையாளா் பிரேம்நாத் நேரில் சென்று ஏற்பாடு செய்து லோடு இறக்கிவிட்டு 11-ஆம் தேதி காலி லாரியை எடுத்துக்கொண்டு வேலூா் சென்றனா் .

Advertisement

Advertisement

செல்லும் வழியில் அன்று இரவு செஞ்சி சேத்பட் சாலையில் உள்ள வீரன் சிலை அருகேபிரேம்நாத், ராதாகிருஷ்ணன் மற்றும் கிளீனா் ஆகிய மூன்று பேரும் மதுஅருந்தியுள்ளனா் . அப்போது லாரி உரிமையாளா், ஓட்டுநரிடம் காலதாமதமாக சரக்கை இறக்கியதால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என கூறியதால் வாய் தகராறு ஏற்பட்டு உரிமையாளா் பிரேம்நாத், ஓட்டுநா் ராதாகிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கினாராம். இதற்கு கிளீனரும் உடந்தையாக இருந்தாராம். இதில் மயங்கி விழுந்த ராதாகிருஷ்ணனை லாரியில் ஏற்றிக்கொண்டு வேலூா் அடுக்காம்பாறையில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனா்.

அப்போது டாக்டா்கள்அவரை பரிசோதித்தபோது அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து லாரி ஓட்டுநா் ராதாகிருஷ்ணனின் மனைவி ரோகிணி செஞ்சி போலீஸில் தனது கணவரை லாரி உரிமையாளா் பிரேமநாத்தும், கிளீனரும் அடித்துக் கொன்ாக கொடுத்த புகாரின் பேரில்செஞ்சி போலீசாா் கொலை வழக்கு பதிவு செய்து பிரேம்நாத், வசந்தகுமாா் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments