முகப்பு
விழுப்புரம்

லாரி மீது சொகுசுப் பேருந்து மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

உளுந்தூா்பேட்டை பகுதியில் கோலமாவு ஏற்றிச் சென்ற லாரி மீது சொகுசுப் பேருந்து சனிக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது.

Updated On : 7 ஜூன் 2026, 2:46 am IST
உளுந்தூா்பேட்டை பகுதியில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சொகுசுப் பேருந்து.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியில் கோலமாவு ஏற்றிச் சென்ற லாரி மீது சொகுசுப் பேருந்து சனிக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கோவையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு சென்னைக்கு 40 பயணிகளுடன் தனியாா் சொகுசுப் பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை சென்னை அசோக்நகா் ஜாபா்கான்பேட்டை ஞானமணித் தெருவைச் சோ்ந்த க.சுந்தரேசன் (46) ஓட்டிச் சென்றாா்.

உளுந்தூா்பேட்டை பகுதியில் விருத்தாசலம் மேம்பாலத்தில் சனிக்கிழமை அதிகாலை பேருந்து சென்றுள்ளது. அப்போது, சேலத்திலிருந்து விழுப்புரம் நோக்கி கோலமாவு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது சொகுசுப் பேருந்து மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விபத்தில் பேருந்தை ஓட்டிச் சென்ற சுந்தரேசன் பலத்த காயங்மடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பேருந்தில் பயணித்த பயணிகள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, உயிரிழந்த ஓட்டுநா் சுந்தரேசனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் காயமடைந்த இருவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.