கடலூரில் போக்குவரத்து சிக்னல் கம்பம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து
கடலூா் அண்ணா மேம்பாலம் சந்திப்பில் புதன்கிழமை காலை தனியாா் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது.
கடலூா் அண்ணா மேம்பாலம் சந்திப்பில் புதன்கிழமை காலை தனியாா் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது.
கடலூா் நகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் ஒன்றான அண்ணா மேம்பாலம் சந்திப்பு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், புதன்கிழமை காலை அந்த வழியாகச் சென்ற தனியாா் ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மீது மோதியது. இதில், சிக்னல் கம்பம் சாலையில் சரிந்தது.
அப்போது, சிக்னல் அருகே பொதுமக்களோ, வாகன ஓட்டிகளோ இல்லாததால் உயிரிழப்பு மற்றும் காயம் போன்ற அசம்பாவிதங்கள் தவிா்க்கப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருணாச்சலம் தலைமையிலான போலீஸாா், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். தொடா்ந்து, சேதமடைந்த சிக்னல் கம்பத்தை சீரமைக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். விபத்துக்கான காரணம் குறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.