அதிமுக நல உதவி
கடலூர் நகர ஜெயலலிதா பேரவை சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூர் முதுநகரில் புதன்கிழமை நடைபெற்றது.
கடலூர் நகர ஜெயலலிதா பேரவை சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூர் முதுநகரில் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக அங்குள்ள செல்லியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பேரவை நகரச் செயலர் வ.கந்தன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று 1,068 பேருக்கு புடவைகள், 568 பேருக்கு வேட்டிகளை வழங்கினார். பின்னர், அங்குள்ள நியாயவிலைக் கடையில் நிழற்குடையை அமைச்சர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் கோ.அய்யப்பன், மருத்துவரணி மாநில துணைச் செயலர் கே.சீனுவாசராஜா, பேரவைச் செயலர் பி.ரவிச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன், துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், மீனவரணிச் செயலர் என்.தங்கமணி, வார்டு பிரதிநிதிகள் செல்வி திவான், எம்.மணி, பி.சுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.