அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.5.62 கோடியில் நல உதவிகள்
கடலூர் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.5.62 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.5.62 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் 16 வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் மூலமாக கடந்த ஜூலை மாதம் வரையிலான கால கட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 53 வகையிலான தொழில்களில் ஈடுபடும் 68,212 தொழிலாளர்கள் உறுப்பினர்களாகவும், அமைப்பு சாரா நலவாரியங்களில் 60 வகையான தொழில்களில் ஈடுபடும் 1.69 லட்சம் பேரும், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் 8,276 தொழிலாளர்கள் உறுப்பினர்களாவும் பதிவு செய்துள்ளனர்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும், தொழிலாளர்கள் நல வாரியங்களின் மூலமாக கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு, 60 வயது பூர்த்தியடைந்த தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் மூலமாக ஜனவரி முதல் ஜூலை வரையில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் 2,122 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்கள் மூலம் 14,971 பயனாளிகளுக்கு ரூ.4.32 கோடியும், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியங்கள் மூலம் 205 பயனாளிகளுக்கு ரூ.6.84 லட்சமும் மொத்தம் 17,298 பேருக்கு ரூ.5.63 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் 18 வயது முதல் 60 வயதிற்குள்பட்ட தொழிலாளர்கள், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு பெற்று அரசின் நல த்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.