அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வலியுறுத்தல்
அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என தமிழ்மாநில கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.
அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என தமிழ்மாநில கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.
இந்தச் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எஸ்.சிங்காரம் தலைமை வகிக்க, மாவட்ட பொருளாளர் ஜி.துரை, துணைத் தலைவர்கள் பி.மணி, பி.பெரியசாமி, துணைச் செயலர்கள் எம்.வைத்திலிங்கம், கே.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சங்க சட்ட ஆலோசகராக ப.பிரபுமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமும், வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஓய்வூதிய வயதை பெண்களுக்கு 50 ஆகவும், ஆண்களுக்கு 58 ஆகவும் குறைத்து ஓய்வூதியம் வழங்குவதோடு, ஓய்வூதியத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
நிலுவையில் உள்ள 2016-17-ஆம் ஆண்டுக்கான நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நிர்வாகிகள் ஏ.சாமிதுரை, என்.செல்வராஜ், எஸ்.பரமசிவம், ஏ.செல்வகுமாரி, டி.மாரிமுத்து, ஆர்.இந்திரா, டி.மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக மாவட்டச் செயலர் இ.எம்.அஞ்சாபுலி வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி பி.சக்திவேல் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.