FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குளத்துக்கு வேலி அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

காடாம்புலியூர் தாமரைக் குளத்தில் வேலி அமைக்கக் கோரி, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

காடாம்புலியூர் தாமரைக் குளத்தில் வேலி அமைக்கக் கோரி, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 பண்ருட்டி ஒன்றியம், காடாம்புலியூர், காந்தி நகர் அருகே தாமரைக் குளம் அமைந்துள்ளது.  ஆழம் மிகுந்த இந்தக் குளத்தில் மூழ்கி பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்தக் குளத்தைச் சுற்றி வேலி அமைத்து உயிர்  பலியாவதைத் தடுக்க வேண்டும். 29.10.2013 அன்று பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப்  பேச்சுவார்த்தையில் அளித்த உறுதியின்படி குளத்தில் மூழ்கி இறந்தவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் நிதி வழங்க வேண்டும், குளத்தைச் சுற்றி வேலி அமைத்துத் தர வேண்டும். காந்தி நகரில் குண்டும், குழியுமாக உள்ள தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. 
  காடாம்புலியூர் காந்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலர் ஏ.லாரன்ஸ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு கே.இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் என்.அர்ச்சுணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments