கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேரோட்டம்
சிதம்பரம் பெரியார் தெருவில் அமைந்துள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயில் திருவிழாவில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் பெரியார் தெருவில் அமைந்துள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயில் திருவிழாவில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்தக் கோயிலில் 10 நாள் உத்ஸவம் கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கூத்தாடும் பிள்ளையார் தேரில் எழுந்தருளிய பின்னர் தேர் புறப்பட்டது.
தேரானது அனந்தீஸ்வரன்கோயில் அக்ரகாரம், அனந்தீஸ்வரன்கோயில் தெரு, சின்னக்கடைத்தெரு, பெரியார்தெரு வழியாகச் சென்று மீண்டும் நிலையை அடைந்தது. விழாவில் திரளானோர் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ராமு குருக்கள், விழாக் குழுவினர் செய்துள்ளனர். பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.
வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.