228 ஜோடிகளுக்கு திருமணம்: திருவந்திபுரத்தில் வாகன நெரிசல்
கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை 228 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை 228 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணம் கைகூடாதவர்கள் இந்தக் கோயிலில் வேண்டிக்கொண்டு, திருமணம் நிச்சயமானதும் இங்கு மணம் செய்துகொள்வது வழக்கம். அதன்படி, புதன்கிழமை முகூர்த்த தினம் என்பதால், இந்தக் கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.
கோயிலில் முறைப்படி பதிவு செய்துகொண்ட 228 ஜோடிகளுக்கு காலை 6 மணி முதல் 11.30 மணி வரை திருமணம் நடைபெற்றதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. அதே நேரத்தில் கோயிலைச் சுற்றியுள்ள மண்டபம், சத்திரம், திருமண மண்டபங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றில் சுமார் 50 திருமணங்கள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
278 திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றதால், திருவந்திபுரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பண்ருட்டி - கடலூர் சாலையில் கோயில் அமைந்துள்ள திருவந்திபுரத்துக்கு சுமார் 3.5 கிமீ தொலைவுக்கு முன்னமே வாகனங்கள் நிறுத்தப்பட்டு மணமக்கள், அவர்களது உறவினர்கள் நடந்தே கோயிலுக்கு வந்தடைந்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.