FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

750-ஆவது ஆண்டு தேசிகர் பிரம்மோத்ஸவம் தொடக்கம்

கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் தேசிகர் 750-ஆவது ஆண்டு பிரம்மோத்ஸவ கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் தேசிகர் 750-ஆவது ஆண்டு பிரம்மோத்ஸவ கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவந்திபுரம் ஸ்ரீதேவநாதசுவாமி கோயிலில் தேசிகர் சந்நிதி அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தேசிகர் பிரம்மோத்ஸவம் 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். 
தற்போது 750-ஆவது ஆண்டு பிரம்மோத்ஸவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர், இருவரும் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி அறையில் காட்சியளித்தனர்.
இதையடுத்து, புதன்கிழமை அதிகாலை, அலங்கரிக்கப்பட்ட தேசிகர் முன்னிலையில் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தேசிகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மாலையில், தேசிகர் வீதியுலா வந்தார். 
விழா நாள்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் தங்க விமானம், சூரிய விமானம், யாழி, சந்திர பிரபை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும், 20-ஆம் தேதி காலை தேசிகர் தேர் திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 21-ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்தன்று அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சந்நிதியில் தேசிகர் ரத்னாங்கி சேவை நடைபெறுகிறது. பின்னர், தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், ராமன், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார் சந்நிதிகளுக்குச் சென்று வழிபடுகிறார். 
மாலையில் கண்ணாடி பல்லக்கில் தேசிகர் வீதி உலா நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments