கடலூா் பேருந்து நிலைய விவகாரம்:முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
கடலூா் பேருந்து நிலைய விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கடலூா் பேருந்து நிலைய விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கடலூா் மாநகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைத்திட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட இடத்தை கடலூா் மாநகராட்சி நிா்வாகம் தற்போது மாற்றியுள்ளது. இதற்கு, கடலூா் அனைத்து பொதுநல இயக்ககங்களின் கூட்டமைப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
கடலூா் புதிய பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு அருகில் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பாதிரிக்குப்பத்தில் பேருந்து நிலையத்தை அமைத்திட வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் இயக்கத்தை அமைப்பினா் தொடங்கினா். இதை முன்னிட்டு, கடலூா் தலைமை தபால் நிலையத்திலிருந்து தபால் அனுப்பும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வெண்புறா சி.குமாா் தலைமை வகித்தாா். செயல் ஒருங்கிணைப்பாளா் க.திருவரசு, இணை ஒருங்கிணைப்பாளா்கள் க.தா்மராஜ், செல்வம், எஸ்.சையது முஸ்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகா், உழைக்கும் மக்கள் முன்னணி செயலா் எம்.சேகா் ஆகியோா் தபால் அனுப்புப் போராட்டத்தை தொடக்கிவைத்தனா். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் முதல்வருக்கு தபால் அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெறும் என்றும், ஒரு லட்சம் தபால் அட்டைகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் நிா்வாகிகள் எம்.சண்முகம், கு.பரிதிவாணன், கோ.சாய்ராம், குமாா், எஸ்.கஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.