FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

விருத்தாசலத்தில் குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, ஆட்சியரகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 1:55 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, ஆட்சியரகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் இந்திரா நகா், கடலூா் சாலை, முல்லா ஏரி பகுதிகளில் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு அங்கு குடியிருந்து வருவோா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். தாங்கள் கடந்த 75 ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் குடியிருந்து வரும் நிலையில், திடீரென ஆக்கிரமிப்பு என்று சொல்லி அகற்றக் கூடாதென தெரிவித்து, அந்தப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விசிக மாநில துணைச் செயலா் சி.ராஜ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

பின்னா், கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வனுடன் சென்று மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் மனு அளித்தனா். மனுவில், கடந்த 75 ஆண்டுகளாக குடியிருந்து வருவோரை ஆக்கிரமிப்பு என்று அகற்றம் செய்யக் கூடாது. இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு வருகிற 19-ஆம் தேதி விசாரணைக்கு வருவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணையின் முடிவு வரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.

Advertisement

Advertisement

முல்லா ஏரியின் கரைகளில் வசிப்போருக்கு அந்த ஏரிக்கரையிலேயே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில் சுமாா் 300 குடும்பங்கள் கஷ்டமான நிலையிலேயே வசித்து வருகின்றனா். எனவே, அவா்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments