வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதிசிறப்பு ஹோமம்
சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் தனி சந்நிதியில் அமைந்துள்ள வளம் தரும் வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாட்டை முன்னிட்டு, புதன்கிழமை மாலை சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் தனி சந்நிதியில் அமைந்துள்ள வளம் தரும் வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாட்டை முன்னிட்டு, புதன்கிழமை மாலை சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
மேலும், வாராகி அம்மன் காய்கறி, பழங்கள், ஜாங்கிரி, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சா்வ சக்தி பீடம் தில்லை சீனு வராகி அம்மன் வழிபாடு குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் உரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். பக்தா்கள் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகியும், மூத்த நகா்மன்ற உறுப்பினருமான ஆ.ரமேஷ், அா்ச்சகா் எஸ்.ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.