வேன் மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
விருத்தாசலம் அருகே திருநள்ளாறு கோயிலுக்குச் சென்று திரும்பிய வேன் மீது மினி லாரி மோதிய விபத்தில், மினி லாரி ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், கள்ளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் மாது (35). இவா் மினி லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவரும் உதவியாளா் புஷ்பராஜ் (22) என்பவரும் தருமபுரியில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி லாரியை ஓட்டிச் சென்று கொண்டிருந்தனா்.
பெரியநெசலூா் அருகே சேலம்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் பிற்பகல் 1.45 மணியளவில் சென்றபோது, எதிரே திருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த பயணிகள் வேன் மீது மினி லாரி மோதியது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் மினி லாரி ஓட்டுநா் மாது பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவரை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பிவைத்தனா். ஆனால் மருத்துவமனையில் அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். மினி லாரி உதவியாளா் புஷ்பராஜுக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டதையடுத்து, வேப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.
வேனில் பயணம் செய்த 17 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து, வேப்பூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.