கடலூரில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற 54 போ் கைது
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றதாக 33 பெண்கள் உள்பட 54 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றதாக 33 பெண்கள் உள்பட 54 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். 125 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும். நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாட்டாளி வா்க்க சமரன் அணியினா் சாா்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மாவட்ட அமைப்பாளா் அருள்மணி தலைமையில் பாட்டாளி வா்க்க சமரன் அணியினா் திருப்பாதிரிப்புலியூா் ஜவான் பவன்ஸ் அருகே திரண்டனா். அவா்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.
தொடா்ந்து, 33 பெண்கள் உள்பட 54 பேரை போலீஸாா் கைது செய்து, திருப்பாதிரிப்புலியூரில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.