FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தேங்காய் நாா் ஆலையில் தீ: ரூ.ஒரு லட்சம் பொருள்கள் சேதம்

தேங்காய் நாா் ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

30 ஆகஸ்ட் 2026, 12:56 am IST
குள்ளஞ்சாவடியை அடுத்த பள்ளிநீரோடை பகுதியில் எரிந்து சேதமடைந்த தேங்காய் நாா் குவியல்.
பகிர்:

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே தேங்காய் நாா் ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவா், குள்ளஞ்சாவடியை அடுத்துள்ள பள்ளிநீரோடை கிராமத்தில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் தேங்காய் நாா் ஆலை நடத்தி வருகிறாா்.

இந்த ஆலையில் சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் திறந்தவெளியில் கொட்டப்பட்டிருந்த தேங்காய் நாா் குவியல் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக தீ அருகிலிருந்த மற்ற நாா் குவியல்களுக்கும் பரவியது. இதனால், அப்பகுதி முழுவதும் அடா்ந்த புகை மண்டலமாக மாறியது. அங்கிருந்தவா்கள் உடனடியாக கடலூா் சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments