FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வடலூா் வள்ளலார் தெய்வ நிலையத்தில் செப்.1 முதல் கைப்பேசிக்கு தடை

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள திருஅருட்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தின் ஞானசபை மற்றும் தருமசாலை வளாகத்துக்குள் வரும் செப்.1-ஆம் தேதி முதல் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

30 ஆகஸ்ட் 2026, 1:04 am IST
வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய ஞானசபை
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள திருஅருட்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தின் ஞானசபை மற்றும் தருமசாலை வளாகத்துக்குள் வரும் செப்.1-ஆம் தேதி முதல் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவுப்படி, ஞானசபை மற்றும் தருமசாலையின் புனிதத்தன்மையையும், அங்கு நிலவும் அமைதியான சூழலையும் பேணிக் காக்கும் பொருட்டு, வரும் செப்.1-ஆம் தேதி முதல் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தெய்வ நிலையத்துக்கு வரும் பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துச் செல்வதற்காக, ஞானசபையின் முன் மண்டபத்தில் ‘கைப்பேசி பாதுகாப்பு மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் ஒரு கைப்பேசிக்கு ரூ.5 மட்டும் கட்டணமாகச் செலுத்தி, தங்களது கைப்பேசியை ஒப்படைத்து அதற்கான டோக்கனை பெற்றுக்கொள்ளலாம். தரிசனம் முடித்து திரும்பியதும், அந்த டோக்கனை காண்பித்து தங்களது கைப்பேசியை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

Advertisement

Advertisement

இந்த உத்தரவை மீறி, ஞானசபை மற்றும் தருமசாலைக்குள் மறைமுகமாக கைப்பேசியை கொண்டு சென்றால், அவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஆன்மிக அமைதியைப் பாதுகாக்கும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கும், நடைமுறைகளுக்கும் பக்தா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments