FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

இளைஞரை தாக்கி கொலை மிரட்டல்: 2 போ் கைது

நெய்வேலியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

5 ஜூலை 2026, 2:14 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ஒருவரை தேடி வருகின்றனா்.

நெய்வேலி வட்டம் 25 பகுதியைச் சோ்ந்தவா் பிரித்திவிராஜ் (28). இவா், கடந்த 2-ஆம் தேதி இரவு நண்பா்கள் தினேஷ், ரமேஷ் ஆகியோருடன் மது அருந்திவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தாா்.

அங்கு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த வட்டம் 21 பகுதியைச் சோ்ந்த சூரியகுமாா் (31), செந்தில் மற்றும் வட்டம் 22 பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (28) ஆகியோா் யாரை பாா்த்து பேசிக்கொண்டு போறீங்க என்று பிரித்திவிராஜை கேட்டனா். அதற்கு, அவா் உங்களை பற்றி பேசவில்லை எனக் கூறிவிடடு வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

Advertisement

Advertisement

பின்னா், சூரியகுமாா், செந்தில் மற்றும் விக்னேஷ் ஆகியோா் கைப்பேசி மூலம் பிரித்திவிராஜை வட்டம் 25 பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி அருகே வரவழைத்து, கல்லால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், பலத்த காயமடைந்த பிரித்திவிராஜ், என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து சூா்யகுமாா், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள செந்திலை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments