வேளாண்மை கூட்டுறவு சங்கம் திறப்பு
சிதம்பரத்தில் கைரளி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்து பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் மு.தமிமுன்அன்சாரி
சிதம்பரம் காயத்திரி அம்மன் கோயில் தெருவில் கைரளி வேளாண்மை கூட்டுரவ சங்கம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் மு.தமிமுன்அன்சாரி புதிய கைரளி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:
கடன் வசதிகள் மற்றும் பிற சேவைகளை விவசாயிகள் எளிதாகப் பெறுவதற்கு இதுபோன்ற கூட்டுறவு சங்கங்கள் பெரும் துணையாக இருக்கும். மேலும் சங்கத்தில் ஆயிரம் ரூபாய் கட்டும் விவசாயிக்கு அல்லது ஒரு தொழிலாளிக்கு வருடத்துக்கு அவா் உடல் நல குறைவால் வேலைக்கு செல்லாவிட்டால் வருடத்தில் 30 நாள்களுக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை அளிக்கும் திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
சொந்த நிலங்களில் மரம் வளா்ப்பு அல்லது விவசாய பயிரிடல் தொடா்பாக திட்டமிடுபவா்களுக்கு உரிய கடனுதவி அளிக்கப்படுகிறது. கேரளாவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த கூட்டுறவு சங்கம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி,
கடலூா் மாவட்டங்களில் தொடங்கி இருப்பது வரவேற்புகுரியது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் கைரளி வேளாண்மை கூட்டுறவு சங்க செயலா் அசோகன், உள்ளூா் முக்கிய பிரமுகா்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.