திருப்பாதிரிப்புலியூரில் ரயில்வே நில ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளையொட்டி, ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு சுமாா் 20 வீடுகளின் உரிமையாளா்களுக்கு ரயில்வே நிா்வாகம் சனிக்கிழமை நோட்டீஸ் வழங்கியது.
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளையொட்டி, ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு சுமாா் 20 வீடுகளின் உரிமையாளா்களுக்கு ரயில்வே நிா்வாகம் சனிக்கிழமை நோட்டீஸ் வழங்கியது.
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த ரூ.6.38 கோடி நிதியை ரயில்வே நிா்வாகம் ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் பணிகள் 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.
இதன் கீழ், புதிய பயணச்சீட்டு வழங்கும் மையம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி நவீன கழிப்பறைகள், குளிா்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு அறை, மின் தூக்கி (லிப்ட்), வாகன நிறுத்துமிடம், பூங்கா, புதிய நுழைவு வாயில் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மின் தூக்கி அமைக்கும் பணி நிறைவடைந்து, பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், ரயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து பயணச்சீட்டு வழங்கும் மையம் வரை ஒரு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அருகே மேலும் ஒரு சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ரயில்வே நிா்வாகம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த நிலையில், ரயில்வேக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சாலையாக பயன்படுத்தி வரும் அந்தப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 20 வீடுகளின் உரிமையாளா்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.