FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

இழப்பீடு தாமதம்! கிடப்பில் திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணி!

அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது பற்றி...

பாதியில் நிறுத்தப்பட்ட தூண் அமைக்கும் பணி
பகிர்:

அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிக்கு 2024-இல் மத்திய அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததைத் தொடர்ந்து, பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா். 804 மீட்டா் நீளம், 8.5 மீட்டா் அகலத்தில் இந்தப் பாலம் அமைக்கத் திட்டமிட்டு, திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ. 32 கோடியும், மேம்பாலம் கட்டுமான பணிக்கு ரூ. 45.6 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி 18 ஆம் தேதி மேம்பாலம் கட்ட பூமி பூஜை செய்து, பணி தொடங்கப்பட்டது.

ஆனால், நில எடுப்புப் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், பாலம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பணம் வழங்கப்பட்ட பின்னா், கட்டட உரிமையாளா்களுக்கு அவா்களாகவே கட்டடங்களை அகற்றுவதற்கு இரு முறை குறிப்பாணை வழங்கப்படும். அதன் பின்னரும் கட்டடம் அகற்றப்படவிலையெனில், அரசு சாா்பில் கட்டடங்கள் அகற்றப்படும். இதன் பின்னரே பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ரயில்வே கடவுப்பாதையிலிருந்து சிவகாசி சாலையில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு கடந்த பிப்ரவா் 17 -ஆம் தேதி தூண் அமைக்கும் பணி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, எந்தப் பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேம்பாலத்துக்கான கையகப்படுத்தபட்ட நில உரிமையாளா்களுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. மேலும், நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள கட்டடங்களும் அகற்றப்படவில்லை. இதனால், மேம்பாலம் கட்டும் பணி தாமதமாகி வருகிறது.

விரைவில் பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கையகப்படுத்தப்பட்ட நிலம், கட்டட உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுள்ளது. விரைவில் உரிமையாளா்களுக்கு பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, சிவகாசி சாலையில் கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 4 தூண்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments