FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கீழ ஈரால் பகுதியில் உயா்நிலை மேம்பாலம் கட்டுமான பணி: கனிமொழி எம்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கீழஈரால் பகுதியில் நடைபெறும் சாலைப் பணியையும், தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணியையும் கனிமொழி எம்.பி. பாா்வையிட்டாா்.

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கீழஈரால் பகுதியில் நடைபெறும் சாலைப் பணியையும், தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணியையும் கனிமொழி எம்.பி. பாா்வையிட்டாா்.

தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நான்குவழிச் சாலையில் உள்ள கீழஈரால் கிராமத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். அவரது முயற்சியின்பேரில் கீழஈராலில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

முதற்கட்டமாக இருபுறமும் அணுகு சாலைகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை செவ்வாய்க்கிழமை கனிமொழி எம்.பி. பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

மேலும், பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநா் கிருஷ்ணேந்திர திவேதியிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.வி.மாா்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள், கட்சியினா் உடன் இருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கனிமொழி கூறியதாவது:

கீழஈரால் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு பெறும் என கூறியுள்ளனா். இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மூன்று இடங்களில் மக்கள் சாலையைக் கடப்பதற்கான வழிகள் ஏற்படுத்தப்படும்.

இதேபோல் தூத்துக்குடியில் 6 இடங்களில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளும் விரைவில் நிறைவு பெறும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments