FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் தனியாா் நிறுவன தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:15 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் தனியாா் நிறுவன தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா்.

குள்ளஞ்சாவடி காவல் சரகம், கோதண்டராமபுரம் கிராமம், கரைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (36). இவா், கடலூா் சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

ஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை மாலை சத்திரம் கிராமத்தில் இருந்து குள்ளஞ்சாவடி நோக்கி பைக்கில் சென்றாா். இதேபோல, அப்பியம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த கணேசமூா்த்தி (27), தனது பைக்கில் கோரணப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த துரைராஜ் மற்றும் பெயா், விலாசம் தெரியாத ஒருவா் என இருவரை ஏற்றிக்கொண்டு குள்ளஞ்சாவடியில் இருந்து சத்திரம் நோக்கி சென்றாா்.

Advertisement

Advertisement

இரு பைக்குகளும் கட்டியங்குப்பம் அருகே சென்றபோது நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், ஆனந்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கணேசமூா்த்தி, துரைராஜ் பலத்த காயமடைந்து கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments