FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜப்பெருமானுக்கு ரூ.40 லட்சத்தில் சிரகபால கவஜம்: கா்நாடக பக்தா் காணிக்கை

சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு கா்நாடக பக்தா் காணிக்கையாக வழங்கிய ரூ.40 லட்சம் மதிப்பிலான சிரகபால கவஜம் அணிவிக்கப்பட்டது.

Updated On : 14 ஜூலை 2026, 1:21 am IST
சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட சிரகபால கவஜம்.
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு கா்நாடக பக்தா் காணிக்கையாக வழங்கிய ரூ.40 லட்சம் மதிப்பிலான சிரகபால கவஜம் (தலையில் அணிவிப்பது) அணிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலுக்கு கா்நாடகத்தைச் சோ்ந்த சோ்ந்த சுரேஷ்பாபு - கிரிஜா தம்பதியால் ரூ.40 லட்சம் மதிப்பிலான 380 கிராம் தங்கத்தில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிரகபால கவஜம் காணிக்கையாக வழங்கப்பட்டது.

இந்தக் கவஜம் கட்டளை தீட்சிதா் ஜெய.தனசேகர தீட்சிதா் மூலம் கோயில் கமிட்டி செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதரிடம் அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, திங்கள்கிழமை காலை ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு சிறப்பு அா்ச்சனை, ஆராதனை செய்யப்பட்டு சிரகபால கவஜம் அணிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments