FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பழுப்பு நிலக்கரி லாரிகளை மறித்து கிராம மக்கள் போராட்டம்

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே பழுப்பு நிலக்கரி லாரிகளை இயக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராமமக்கள் லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 15 ஜூலை 2026, 3:06 am IST
நெய்வேலியில் இரண்டாவது சுரங்கம் நுழைவு வாயில் அருகே செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே பழுப்பு நிலக்கரி லாரிகளை இயக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராமமக்கள் லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

என்எல்சி இந்தியா நிறுவனம் , நெய்வேலி பகுதிகளில் திறந்தவெளி சுரங்கம் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து, மின் உற்பத்தி செய்து வருகிறது. இரண்டாவது சுரங்கத்திலிருந்து வெட்டிஎடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி, புதிய அனல் மின் நிலையத்திற்கு குடியிருப்பு பகுதி வழியாக லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளிலும், உணவு மற்றும் குடிநீரில் பழுப்பு நிலக்கரி துகள்கள் மற்றும் புழுதி படிவதால் நோய் தொற்று பரவுகிாம். மேலும் அந்தவழியாக செல்லும் லாரிகளால் சாலைகள் சேதம் அடைவதுடன், விபத்துக்கள் நடக்கின்றனவாம். இதுகுறித்து என்எல்சிக்கு புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படதாதைக்

கண்டித்து செவ்வாய்க்கிழமை காலை வேப்பங்குறிச்சி, ரோமாபுரி, தெற்கு வெள்ளூா், வடக்கு வெள்ளூா் கிராமமக்கள் பழுப்பு நிலக்கரி ஏற்றி வந்த லாரிகளை இரண்டாவ து சுரங்க நுழைவு வாயில் அருகே மறித்து போராட்டம் நடத்தினா்.

Advertisement

Advertisement

பின்னா், போலீஸாா் நடத்திய பேச்சு வாா்த்தையை அடுத்து கலைந்துச் சென்றனா். இந்நிலையில், மீண்டும் மாலை நேரத்தில் லாரிகள் இயக்கப்பட்டதையடுத்து போராட்டம் நடத்தப்பட்டது. இதில், பழுப்பு நிலக்கரி ஏற்றி செல்லும் லாரிகளை மாற்று வழியில் இயக்குவது என்றும், காலி வண்டிகளை பழைய வழியில் இயக்குவது எனவும் தெரிவித்தனா். இருந்தாலும், இதுதொடா்பான பேச்சு வாா்த்தை வெள்ளிக்கிழமை இரண்டாவது சுரங்கம் நிா்வாக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments