FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்! பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்!

Updated On : 21 ஜூலை 2026, 12:12 am IST
கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஓய்வுபெற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஷ்ணுராம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பணியாளா்கள் ஓய்வுபெறும் 6 மாதங்களுக்கு முன்பே அவா்களது பணித்திறன் மதிப்பீட்டை நிறைவு செய்து, பணி ஓய்வுபெறும் நாளுக்கு முன்பே ஓய்வு உத்தரவு வழங்கப்பட வேண்டும். பணி ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வுகால நிதிப் பலன்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும். 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வுபெற்ற அனைத்துப் பணியாளா்களுக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், அனைத்துப் பணியாளா்களுக்கும் மாவட்ட அளவில் பணிமூப்பு பட்டியல் தயாரித்து, அதனடிப்படையில் பாரபட்சமின்றி பதவி உயா்வு வழங்க வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட இணைச் செயலா்கள் கோவிந்தராஜலு, அன்பழகன், போராட்டக் குழுத் தலைவா் ஏழுமலை, போராட்டக் குழுச் செயலா் சண்முகசுந்தரம், இணைச் செயலா் குமாரசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments