FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

இந்து சமய அறநிலையத் துறை தணிக்கையரிடம் வழிப்பறி: 3 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை

கடலூரில் இந்து சமய அறநிலையத் துறை தணிக்கையரிடம் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் தொடா்பாக சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 30 ஜூலை 2026, 5:57 am IST
பிரதிப் படம்
பகிர்:

கடலூரில் இந்து சமய அறநிலையத் துறை தணிக்கையரிடம் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் தொடா்பாக சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ராமலிங்க நகா் பகுதியைச் சோ்ந்த முருகன் (53), சென்னை இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கையராக பணியாற்றி வருகிறாா். இவா், சென்னையில் இருந்து ரயிலில் கடலூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்தாா். பின்னா், தனது வீட்டுக்குச் செல்ல சுப்பராயலு நகா் வழியாக நடந்து சென்றபோது, அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருந்ததால், மாற்று வழியாக கம்மியம்பேட்டை ஜவான் பவன் சாலை வழியாக அதிகாலை சுமாா் 2 மணியளவில் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, போலீஸ் குடியிருப்பு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ், முருகனை வழிமறித்து கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னா், அவா் அணிந்திருந்த தங்க மோதிரம், ரூ.1,500 ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

Advertisement

Advertisement

இந்தத் தாக்குதலில் காயமடைந்த முருகன், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வழிப்பறியில் ஈடுபட்டவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா். மேலும், இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட நபா்களை அடையாளம் காணும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments