FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிதம்பரம் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம்: ஜூன் 13-இல் தொடக்கம்

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் ஜூன் 13-ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

Updated On : 2 ஜூன் 2026, 5:26 am IST
பகிர்:

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் ஜூன் 13-ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

உற்சவ விபரம் வருமாறு: ஜூன் 14-ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 15-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 16-ஆம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 17-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 18-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 19-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 20-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

ஜூன் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தோ்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது. ஜூன்.22 அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்தி வீதிஉலா வந்த பின்னா் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

ஜூன் 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூா்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்கள் கமிட்டி செயலா் ஜெ.ஜயசூா்யா தீட்சிதா், துணை செயலாளா் ஏ.கணபதிசுப்பிரமணிய தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments