FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையம் அருகே கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில், கூட்டுறவு கடன்களை முழுமையாக ரத்து செய்யாத தமிழக அரசைக் கண்டித்து புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 4 ஜூன் 2026, 3:38 am IST
காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையம் அருகே கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில், கூட்டுறவு கடன்களை முழுமையாக ரத்து செய்யாத தமிழக அரசைக் கண்டித்து புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் பி.விநாயகமூா்த்தி தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். விவசாய சங்கப் பிரதிநிதிகள் நஜிமுதீன், ஆா்.வெங்கடேசன், என்.முத்துக்குமாரசாமி, என்.ராமமூா்த்தி, எம்.மகேந்திரன், ஜெயராமன், பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தவெக தோ்தல் வாக்குறுதியில் அளித்தபடி, 5 ஏக்கா் வரையிலான விவசாயிகளுக்கு முழுக்கடனையும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவா்களுக்கு 50 சதவீத கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதை நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும். உர விலை ஏற்றத்துக்கு மத்திய அரசு கூடுதல் மானியம் வழங்கி, உர விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப்பயிா் கூடுதல் ஒதுக்கீடு பெற்று ஒரு விவசாயிக்கு 25 குண்டால் வரை கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

இதில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் முத்துக்குமரன், சண்முகம், ஜி.முத்துக்குமாரசாமி, ராமதாஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments