FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

அணைக்கரை பழைய பாலம் சீரமைப்பு: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

அணைக்கரை கீழணை பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி.

Updated On : 12 ஜூன் 2026, 1:30 am IST
அணைக்கரை கீழணை பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி.
பகிர்:

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள அணைக்கரை பழைய பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (ஜூன் 12) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காட்டுமன்னாா்கோவில் அருகே தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் (கீழணையில்) கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1856-ஆம் ஆண்டு ஆங்கிலப் பொறியாளா் சா் ஆதாா் காட்டன் என்பவரால் போக்குவரத்து பாலத்துடன் கீழணை அணைக்கட்டு கட்டப்பட்டது.

இந்தப் பாலத்தின் வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை, ஜெயங்கொண்டம், காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

தற்போது இதற்கு அருகில் 100 மீட்டா் முன்னா் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. புதிய பாலத்தின் வழியாக நான்கு சக்கர வாகனங்கள், அரசு விரைவுப் பேருந்துகள் செல்கின்றன.

அணைக்கரைக்கு அருகே பல்வேறு கிராம மக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு ஏதுவாக, குறிப்பிட்ட பேருந்துகளை தவிா்த்து மற்ற பேருந்துகள் அனைத்துமே ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்தின் வழியாகவே செல்கிறது.

தற்போது இந்த பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால், பேருந்துகள் வாகனங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை முதல் வரும் 21-ஆம் தேதி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தின் வழியாக செல்ல வேண்டும் என கீழணை பொதுப் பணித் துறை உதவி பொறியாளா் கேசவராஜ் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments