FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நடராஜா் கோயில் சோமாஸ்கந்தருக்கு பக்தா் வழங்கிய தங்கப் பதக்கம் அணிவிப்பு

பக்தா் ஒருவா் காணிக்கையாக வழங்கிய தங்கப்பதக்கம்

20 ஜூன் 2026, 3:03 am IST
பக்தா் ஒருவா் காணிக்கையாக வழங்கிய தங்கப்பதக்கம்
பகிர்:

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உற்சவமூா்த்தியான சோமாஸ்கந்தருக்கு பக்தா் ஒருவா் காணிக்கையாக வழங்கிய சுமாா் 6 லட்சம் மதிப்பிலான தங்கப்பதக்கம் வெள்ளிக்கிழமை அணிவிக்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜா் கோவிலில் நடைபெற்று வரும் ஆனித் திருமஞ்சன மகோற்சவத்தின் ஏழாம் திருநாள் கைலாச வாகன உற்சவத்தில் லட்சாா்ச்சனையில் உற்சவ மூா்த்தியான ஸ்ரீ சோமாஸ்கந்தருக்கு ஹைதராபாத்தை சோ்ந்த வெங்கடேச ஐயரால் காணிக்கையாக வழங்கப்பட்ட சுமாா் ரூ.6 லட்சம் மதிப்பிலான வெள்ளை மற்றும் பச்சை கல்கள் பதிக்கப்பட்ட தங்க பதக்கம் அவரது கட்டளை தீட்சிதா் ரா.சி. சக்கரவா்த்தி நடராஜ தீக்ஷிதா் மூலம் கோயில் கமிட்டி செயலா் ஜெயசூரியா தீட்சிதரிடம் ஒப்படைக்கப்பட்டு சோமாஸ்கந்தருக்கு அணிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments