உலக பட்டினி தினம்: தவெக சாா்பில் அன்னதானம்
திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே அன்னதானம் வழங்கிய வீட்டு வசதித்துறை அமைச்சா் பி.ராஜ்குமாா்.
உலக பட்டினித் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கடலூரில் ஏழை எளிய மக்களுக்கு வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
உலக பட்டினித் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, கடலூா் மாவட்ட த.வெ.க சாா்பில் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலரும் வீட்டு வசதித்துறை அமைச்சருமான பி. ராஜ்குமாா் தலைமை வகித்து, ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கினாா்.
இதேபோன்று, கடலூா் மாவட்டம் திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ராமநத்தம் பேருந்து நிலையம் அருகே தவெக சாா்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தலைமை கழக நிலைச் செயலா் ராஜசேகா் தலைமையில் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட பொருளாளா் கண்ணதாசன், ஒன்றிய செயலா் நீலகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.